திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்கள் அளித்த இரகசிய தகவலின் படி செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மு.சரவண குமரன் அவர்களின் மேற்பார்வையில், மேல்செங்கம் வட்ட காவல் ஆய்வாளர் திரு. S.செங்குட்டுவன் தலைமையில், பாச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து பாச்சல் காவல் நிலைய எல்லைகுட்பட்ட கண்ணகுருக்கை கிராமத்தில் நடத்திய சோதனையில் அன்புதுரை (28) என்பவரின் வீட்டில் Berger மற்றும் Asian நிறுவன பெயிண்ட்டுகளை போலியாக தாயாரிக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி போலியான முறையில் பெயிண்ட் தாயாரித்து அதனை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் உடனடியாக அன்புதுரை என்பவரை கைது செய்து. அவரிடமிருந்து போலியாக பெயிண்ட் தாயாரிக்கும் இரண்டு இயந்திரம், ஒரு கணினி, Asian Paint 60 பக்கெட்டுகளில் 527 Litter மற்றும் Berger Panit 109 பக்கெட்டுகளில் 282 லிட்டர் மற்றும் 88,970/- ரூபாய் இரொக்கமாகவும் பறிமுதல் செய்யப்பட்டு, பாச்சல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.