திருநெல்வேலி : தனியார் வங்கி கேரளாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் தனியார் வங்கியின் கிளை நெல்லை பாளையங்கோட்டையில் ,செயல்பட்டு வருகிறது. இதில் பாளையங்கோட்டை குமரேசன் நகரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் திருநாவுக்கரசு (38), என்பவர் மேலாளராக உள்ளார். இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (27), என்பவர் ஊழியராக உள்ளார். ரூ.69 லட்சம் மோசடி இந்த வங்கியில் கடந்த மாதம் வரவு-செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கடந்த 3 மாதங்களில் அதிகப்படியான நகைகளுக்கு கடன் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து லாக்கரில் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தபோது, மோசடியாக போலி நகைகளை அதாவது கவரிங் நகைகளை வைத்து ரூ.69 லட்சத்துக்கு கடன் வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலாளர் கைது இதுகுறித்து வங்கி மண்டல மேலாளர் சுமேஷ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில், புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் திரு. திருப்பதி, காவல் உதவிஆய்வாளர் திரு.முஸ்தபா, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஈடுபட்டதாக வங்கி மேலாளர் திருநாவுக்கரசு, செந்தில் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் வங்கி ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Related Tags :