சென்னை: அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் 18.06.2021 அன்று, பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை, மைலாப்பூர், எண் : 18, ராஜசேகரன் தெருவில் உள்ள கிடங்கில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளான லைசால், டெட்டால் திரவசோப், விம்பார், பிரில் பார், பெம் போன்ற வீட்டு உபயோக கிருமிநாசினிகள் மற்றும் வீடு சுத்தம் செய்யும் சானிடிரி தயாரிப்புகள் ஆகியவை சட்டவிரோதமாக போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
எனவே அங்கு போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 6 இலட்சம் மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி, மேற்படி சட்டவிரோத போலி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நான்கு குற்றவாளிகள் சாகர் படேல், ரமேஷ் பர்மாபர்வாதியா, பவன்குமார் மற்றும் பிராகாஷ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக சென்னை, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு – 2 ல் குற்ற எண் 31/2021 ச / பி 468 , 420 இ.த.ச. மற்றும் 51 ( b ) ( i ) உடன் 63 பதிப்புரிமை சட்டம் , 1957 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.