திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் நத்தம் அரசு தலைமை மருத்துவ அலுவலர் தங்கதுரை தலைமையில் நத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திரு.சரவணன், சுகாதார துறையினர் நத்தம் மற்றும் சுற்று வட்டாரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது.இந்நிலையில் சிறுகுடியில் குமார்(42), கோட்டையூரில் மதினா(32), நத்தத்தில் முருகேசன்(62), சாந்தி(55) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 10 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் .மாவட்டத்தில் தொடர்ந்து போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவதால் மருத்துவத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மலைப் பகுதிகளில் தொடர்ந்து போலி டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.