திண்டுக்கல்: திண்டுக்கல் மருத்துவமனைகளில் கடைநிலை ஊழியராக பணியாற்றிய பலர் மலைப்பகுதியில் டாக்டர்களாக மாறி ஊசி,மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு போலி டாக்டர்கள் இருப்பதை ஏற்கனவே பல இணை இயக்குனர்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருந்தாலும் போலி டாக்டர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா, பூம்பாறை கிராமத்தில் எந்தவிதமான மருத்துவப் படிப்பும் படிக்காமல் பொதுமக்களுக்கு பெண்ணொருவர் மருத்துவம் பார்த்துள்ளார். இங்கே ஆய்வு நடத்திய மருத்துவத் துறையினர் போலி டாக்டர் மோகினி (56) குறித்து போலீசில் புகார் செய்தனர். கொடைக்கானல போலீசார் போலி டாக்டரைகைது செய்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா