ஈரோடு : ஈரோட்டை சேர்ந்த (38), வயது பெண்ணுக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். சிறுமிக்கு 3 வயது இருக்கும்போதே அந்த பெண் தனது கணவரை பிரிந்து சென்றார். அதன்பிறகு ஈரோட்டை சேர்ந்த (40) வயதான பெயிண்டர் ஒருவருடன் அந்த பெண் வாழ்ந்து வந்தார். சிறுமியின் தாய் தனியார் மருத்துவமனைகளில், தனது கருமுட்டையை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில், அந்த பெண்ணும், கள்ளக்காதலனும் செலவு செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து சிறுமியையும் கருமுட்டை விற்பனை செய்வதில், ஈடுபடுத்த அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக சிறுமியின் தாயும், அவருடன் கருமுட்டை கொடுத்து வரும் ஈரோடு கைகாட்டி வலசு திருவள்ளுவர் நகரை சேர்ந்த மாலதி (36), ஆகியோர், கைக்காட்டிவலசு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த டிரைவரான ஜான் (25), என்பவர் மூலம் சிறுமிக்கு வேறு பெயரில், 1995-ம் ஆண்டு பிறந்ததாக புதிய ஆதார் கார்டு பெற்று உள்ளனர்.
இந்த போலி ஆவணத்தை பயன்படுத்தி ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் ஆகிய இடங்களில், உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சிறுமியை அவரது தாயும், மாலதியும் அழைத்து சென்று 8 முறை கருமுட்டையை விற்பனை செய்து உள்ளனர். இதற்கிடையில், சிறுமிக்கு அவர்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலும் செய்து வந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி தனது உறவினர்கள் மூலம், ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் சூரம்பட்டி காவல் துறையினர், விசாரணை நடத்தி சிறுமியின் தாய், தாயின் கள்ளக்காதலன், மாலதி ஆகிய 3 பேர் மீது போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில், சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்வதற்காக போலி ஆவணம் தயாரித்து கொடுத்த ஜானை நேற்று காவல் துறையினர், கைது செய்தனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில், கருமுட்டை விற்பனை செய்யப்படுவதான புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர், தெரிவித்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :