விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் , வீரசோழனை சேர்ந்த முகமது இப்ராஹிம் மனைவி ரஹீமா பீவி இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் தங்களுடைய சொத்தில் ஒரு பகுதியை பள்ளிவாசலுக்கு எழுதிக் கொடுத்தார்களாம். இந்த நிலையில், கடந்த ஆண்டு தங்களுடைய சொத்துக்கள் குறித்து வருவாய்துறை அலுவலர்களிடம் சரிபார்த்தபோது, மேற்கண்ட சொத்துக்கள் வேறு ஒரு நபரின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலமோசடி குறித்து, ரஹீமா பீவி , வீரசோழன் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் விசாரணை காலதாமதம் ஏற்பட்டதால், ரஷிமா பீஷ நீதிமன்றத்தில் ஆஜராகி புகார் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், வீரசோழன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது , வீர சோழன் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹக், ரஹீமா பீவியின் கணவர் எழுதிக் கொடுத்தது போல போலியான உயில் சாசனம் தயாரித்து அதில், முகமது ஹக் வாரிசுதாராக காட்டியுள்ளார். மேலும், இஸ்லாமிய டிரஸ்ட் போர்டு லெட்டர்பேட்டை போலியாக தயார் செய்து ,அதில் பட்டா மாறுதலுக்கா பரிந்துரை கடிதம் தயார் செய்தது தெரிந்தது.
போலியான ஆவணங்கள் தயார் செய்து வேறொரு நபரின் சொத்தை அபகரித்த முகமது ஹக் மீது குற்றஞ்சாட்டப்பட்டு
நீதிமன்ற உத்தரவின் பேரில் வீரசோழன் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி