சேலம் : சேலம் மாநகரம் அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு கும்பல் ஆதார் கார்டில் எண் மற்றும் முகவரியில் மாற்றம் செய்து EMI-ல் பொருட்களை வாங்கி ஏமாற்றி வந்தவர்களை, காவல் துணை ஆணையாளர் குற்றம் மற்றும் போக்குவரத்து திரு.S.செந்தில் அவர்களின் உத்தரவின்பேரில், மேற்கு சரக குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.C.R.பூபதிராஜன் அவர்களின் தலைமையில், அழகாபுரம் காவல் ஆய்வாளர் திரு.S. கந்தவேல் மற்றும் மேற்கு சரக குற்றப்பிரிவு போலீசார் இன்று 14.12.2019 ஆம் தேதி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் கொண்ட மோசடி கும்பலை அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் இருந்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார் IPS அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. சூர்யா பிரியா
சேலம் மாவட்ட தலைவி
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா