ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் 8 போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து கோவை மண்டல போலிஸ் ஐஜி பவானிஸ்வரி – IPS அவர்கள் உத்திரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் போலிஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் புஞ்சை புளியம்பட்டி போலிஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு கவுந்தபாடி போலிஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ் ஆகியோர் சேலம் மாநகர் பகுதிகளுக்கும் ஈரோடு சூரம்பட்டி போலிஸ் இன்ஸ்பெக்டர் கோமதி ஈரோடு மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பகத்தின் போலிஸ் இன்ஸ்பெக்டர் நர்மத தேவி பவானி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் சென்னிமலை போலிஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கோவை மாநகர் பகுதிகளுக்கும் இடம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்