கோவை : தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல் ரோந்து பணியை துரிதப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதன் அடிப்படையில், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கோவை மாவட்ட துடியலூர் / தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் அவர்களின் தனிப்படை பிரிவு மற்றும் அவரது எல்லைக்கு உட்பட்ட இடங்களில் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் சக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த சில நபர்கள் காவலர்களை கண்டவுடன் தெரித்து ஒட முற்பட்ட நிலையில் அவர்களை மடக்கி பிடித்த போது கையில் சுமார் 10 கிலோ கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்ய எடுத்து செல்லும் போது பிடிபட்டனர்.
அவர்களை விசாரித்த போது பாலக்காடு கோட்டதுறையை சேர்ந்த சுப்பிரமணியம் 28 என்பவர் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார், மற்றவர்களை பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்