கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் சின்ன மட்டாரபள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரவணன் என்பவர் பட்டா மாற்றம் மற்றும் மின் இணைப்புக்கு சான்று வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலர் திரு.கோவிந்தராஜ் அவர்களிடம் இறப்பு சான்று, வாரிசு சான்று கொடுத்த போது சான்றிதழ்கள் போலியானது என கண்டுபிடித்து பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவித்ததின் பேரில் பர்கூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திரு.சக்திவேல் அவர்கள் 12.01.2022 ஆம் தேதி பர்கூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து 13.01.2022 ஆம் தேதி போலியான இறப்பு சான்று, வாரிசு சான்று தயாரித்துக் கொடுத்த குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.