விழுப்புரம் : விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
துணை காவல் கண்காணிப்பாளர் திரு. உமாசங்கர், மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.செல்வராஜ், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.சத்யாநாதன், திரு. கோபி மற்றும் காவலர்கள் பிரபாகரன், இஸ்மாயில், பழனி, ராஜ்குமார், ஆகியோரின் தலைமையில் விழுப்புரம் மகாத்மா காந்தி ரோடு மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் (08.10.2022), இரவு சோதனை செய்ததில் சித்ரா லாட்ஜ் பின்புறம் அமைந்துள்ள பிரவீன் டிரேடிங் கம்பெனி என்ற கடையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், ஸ்கூல் லிப், ஆர் எம் டி, மாணிக்சண்ட் போன்ற பாக்கெட்டுகள் வைத்திருந்ததை கண்டறிந்து குற்றவாளி பிரவீன் குமார் (23), மாந்தோப்பு தெரு, கே.கே ரோடு, விழுப்புரம் என்பவரை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் விசாரணையில் மேலும் ஒருவர் குற்றத்தில் ஈடுபட்டதாக தெரியவர சுல்தான் மைதீன் (37), கீழ்பெரும்பாக்கம், விழுப்புரம். ஆகிய இருவரையும் கைது செய்து இவர்களிடமிருந்து சுமார் 500 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மேற்கண்ட குற்றவாளி கள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.