திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி. கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆரணி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன், அவர்களின் மேற்பார்வையில் ஆரணி கிராமிய காவல் ஆய்வாளர் திரு.புகழ், அவர்களின் தலைமையில் காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் BR நகரை சேர்ந்த ராஜேந்திரன் (63), என்பவர் அவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 6.8 கிலோ கிராம் எடையுள்ள 5880 மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
                                











			
		    



