தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலம் அருகேயுள்ள மைதானத்தில் வைத்து, போதைப் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான “போதை விழிப்புணர்வு ஹாக்கி போட்டி” நடத்த ஏற்பாடு செய்பட்டிருந்தது. இந்த போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்நது கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு கஞ்சா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், நமக்கும் வேண்டாம்” என்ற வாசகங்கள் அடங்கிய செல்பி பாயின்டையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து தானும் செல்பி எடுத்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வின் போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், காவல் ஆய்வாளர்கள் கோவில்பட்டி மேற்கு திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், கோவில்பட்டி கிழக்கு திரு. சுஜித் ஆனந்த், கழுகுமலை திரு. விஜயகுமார், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் திருமதி. பத்மாவதி, கயத்தாறு திரு. பாஸ்கரன் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.