சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர்மாட்டு ஆஸ்பத்திரி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆண்டாள் ஈஸ்வரி (36) என்ற பெண்ணை ஓமலூர் துணை கண்காணிப்பாளர் திருமதி.சங்கீதா, தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு படையை சேர்ந்த SSI சிவப்பிராகசம் . தலைமை காவலர் அய்யப்பன். கிரைம் போலீஸ் பிராகசம், ஆகிய காவலர்கள் அந்த பெண்னிடம் இந்த பையில் சோதனை செய்த போது அதில் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் அந்த பெண்னை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒமலூர் துணை கண்காணிப்பாளர். திருமதி சங்கீதா தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு படை ஓமலூர் வட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்