கோவை : வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பின்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த பஷீர் என்பவரின் மகன் பெக்கி என்கிற ரசீது (32) என்ற வாலிபரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல குனியமுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள குளக்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் மற்றும் பெண் ஒருவரை சோதனை செய்தனர்.
அவர்களிடம் நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரின் மனைவி பானு 50 ரியாஸ் 33 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் நசுருதீன் என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றார் .இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.