கோவை: கோவை குனியமுத்தூர் சப் – இன்ஸ்பெக்டர் திரு.கணேஷ் குமார் நேற்று ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார்.
அவரிடம் போதை ஊசியில் செலுத்தக்கூடிய 40 மாத்திரைகளும் ,பணம் ரூ 3460 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யொட்டி அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் அங்குள்ள சலாம் நகரைச் சேர்ந்த நிசாருதீன் 30 என்பது தெரியவந்தது.அவர் கைது செய்யப்பட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்