தூத்துக்குடி : தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை தரக்கூடிய மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த சுப்புராம் (24), ரமேஷ் (57) மற்றும் குமரேசன் (55) ஆகிய 3 குற்றவாளிகள், கைது டயாஸெபம் மற்றும் நைட்ராஸெபம் (Diazepam & Nitrazepam) எனப்படும் 86 மாத்திரைகள் பறிமுதல். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரையில்லாமல் போதை தரக்கூடிய மாத்திரிகைகளை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.