திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகரில் அத்தியாவசிய மருந்துகளை போதைக்காக பயன்படுத்த திருட்டுத்தனமாக விற்பனை செய்த தனியார் மருந்தக ஊழியர் கைது. இதனை தொடர்ந்து மருந்தக ஆய்வாளர் (Drug Inspector) மற்றும் திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் இணைந்து மருந்தகத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.