திண்டுக்கல் : 2021 ஜூனிலிருந்து 2022 ஜூன் வரையில் கன்னிவாடி, நத்தம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்கள் கடத்தலில்ஈடுபட்டதாக 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 10 பேரின் சொத்துகள், 120 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்புரூ.2 கோடி. மேலும் இதை தடுக்க தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம்.
பாண்டியராஜபுரம், நத்தம், அய்யலுார், குஜிலியம்பாறை, கள்ளிமந்தையம், சாமிநாதபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனைசாவடிகள் செயல்படுகிறது. முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களில், ஈடுபடுபவர்கள் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது. 10 ஜீப்களில் இரவு நேர ரோந்து பணியில் காவல்துறையினர், ஈடுபடுகிறார்கள். குற்ற செயல்களில் ஈடுபட்டு வெளியில் சுற்றுபவர்களையும் கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
