கோவை : கோவை மாநகரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகளை கோவை மாநகர காவல் துறை எடுத்து வருகிறது குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில், போதை பொருட்கள் நடமாட்டம் மற்றும் விற்பனை குறித்து தீவிர கண்காணிப்பு கண்காணிப்பும், சட்ட நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றது மேலும் கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பழக்க வழக்கங்கள் குறித்து கண்காணித்து காவல்துறைக்கு தகவல் அளிப்பது குறித்து கோவை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களை கொண்டு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
(24/08/2022), ஆம் தேதி உடையாம்பாளையத்தை சேர்ந்த இரு நபர்கள் பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளி வளாகத்தின் பின்புறம் பத்தாம் வகுப்பு வகுப்பறை ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டு பீடி, கஞ்சாவை புகைத்துக் கொண்டு புகையை ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் ஊதியதாக தெரிய வருகிறது. அவர்களது செயலை கண்டித்து மாலை சுமார் ஐந்து மணி அளவில் அந்த வகுப்பில் படிக்கும் மூன்று மாணவர்கள் அவர்களிடம் சென்று கேள்வி கேட்டுள்ளார்கள். இதனால் அம் மாணவர்களுக்கும் மேற்படி இரண்டு நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி அதன் தொடர்ச்சியாக அந்த இரு நபர்களும் மூன்று பள்ளி மாணவ மாணவர்களையும் கைகளாலும், கட்டைகளாலும் தாக்கியதாக தெரிய வருகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மேற்படி மூன்று மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களும் பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்ததின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில், பள்ளி கல்லூரி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அல்லது உபயோகம் சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்து அதைப் பற்றி காவல்துறைக்கு நேரடியாகவோ அல்லது ரகசியமாகவோ சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் தகவல் தெரிவிக்காத பட்சத்தில், தகவலை மறைப்பதன் மூலம் அவர்கள் போதைப் பொருட்கள் விற்பனை நடமாட்டம் போன்ற குற்றத்திற்கு உடனையாக இருப்பதாக கருதப்பட்டு அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க பரிசளிக்கப்படும் மற்றும் துறை காவல் துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
