திருவாரூர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை, கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, குவளைக்காள் கடைதெருவில் உள்ள கலைவாணி ஸ்டோரில் சோதனை செய்த போது தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, கடையின் உரிமையாளரான மூங்கில்குடி, தட்சன் தெருவை சேர்ந்த லக்ஷ்மணன் மகன் கலையரசன் என்பவரை விசாரணை செய்து, அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த Hans 960 பாக்கெட்,Cool Lip 198 பாக்கெட்,Vimal Gutka 1410 பாக்கெட் மற்றும்V1 Gutkha 2190 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி கடையின் உரிமையாளரான மூங்கில்குடி, தட்சன் தெருவை சேர்ந்த லக்ஷ்மணன் மகன் கலையரசன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.).,* அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.