தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அரசு கலைக்கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு எனும் முதல்வரின் திட்ட நேரலை காட்சி மாவனவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜேந்திரன் மற்றும் திரு.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புக்கள் பற்றி எடுத்து கூறினர்