செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற உறுதி ஏற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு பகுதியில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன துறை அமைச்சர் தா மோ அன்பரசன் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணித் மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் செங்கல்பட்டு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் .கலால் ஆணையர் ராஜன் பாபு மற்றும் கல்லூரி மாணவிகள் அனைவரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்