மதுரை : மதுரை அருகே பசுமலை மேல்நிலைப்பள்ளி மற்றும் சாலை பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் பயன்பாடு அற்ற தமிழ்நாடு என்ற உறுது மொழி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை மேரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை ஆன புஷ்பம் வரவேற்றார். திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூரண கிருஷ்ணன், போதைப் பொருளாக ஏற்படும் தீமைகள் பற்றியும், சாலைகளில் சீரான வேகத்தை கடைப்பிடிப்பதுபற்றியும், சாலை விதிகளை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றியும் விளக்கிப் பேசினார். சாலை பாதுகாப்பு திட்ட ஆசிரியர் மோசஸ், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லிவிங்ஸ்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் மாணவர்கள் அனைவரும் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மதுரை மாவட்டம், யாதவா மகளிர் கல்லூரியில், “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ,
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலையில்நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, கல்லூரி மாணவிகளுடன் எடுத்துக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி