திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஆரணி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.V.A.ரவிச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில், ஆரணி கிராமிய காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.P.புகழ் அவர்கள் தலைமையில் காவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஆரணி வட்டம், அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா (42), க/பெ சேகர் என்பவர் அரியப்பாடி கிராமத்தில் உள்ள வெண்ணிலா பெட்டிகடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஆரணி வட்டம், குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் (34),
த/பெ சேகர் என்பவர் குன்னத்தூர் பஜாரில், உள்ள அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 1.100-கிலோ கிராம் எடையுள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் முன்னிலையில் இரு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.