கரூர்: கரூர் மாவட்டம் தோகமலை காவல் நிலைய உட்பட்ட கரும்புள்ளி கிராமமான காவல்காரன்பட்டி கிராம பொது மக்களிடம் கள்ளச்சாராயம் விற்பனை பற்றியும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்.
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பது பற்றியும் புகார்கள் பற்றிய தகவல்களை காவல் துறையினருக்கு எவ்வாறு தெரியப்படுத்தலாம்.
என்பது பற்றியும் இலவச தொலைபேசி எண் 10581 பற்றியும் அறிவிப்பு செய்தும் எவ்வாறு மது மற்றும் பிற போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும்.
இப்போதும் மது பழக்கத்திற்கு அடிமையான நபர்களை எவ்வாறு மீட்பது என்பது பற்றியும் மனம் திருந்தி வாழும் நபர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் பற்றியும்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.