இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் (SP) திரு.மயில்வாகனன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், அரக்கோணம் காவல் கண்காணிப்பாளர் (DSP) திரு.மனோகரன் தலைமையில், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் (காவல் ஆய்வாளர்) திரு.கோகுல் ராஜ் அவர்களின் முன்னிலையில், அரக்கோணம் மருந்து கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக அரக்கோணம் மருந்து கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
உலகளவில் தற்போது போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. போதைக்கு அடிமையானவர்களின் உடல், மனம், குடும்பம் பாதிக்கப்படுவதோடு குற்றச் செயல்கள் அதிகரித்து சமூகப் பிரச்னைகளும், சமூக சீர்கேடுகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனை கருத்தில் கொண்டு, போதை மாத்திரைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் அனைத்து மருந்து கடை உரிமையாளர்களும் கலந்து கொண்டு, அவர்கள் போதை தொடர்புடைய சில மருந்துகளை டாக்டர் பரிந்துரை இல்லாமல் விற்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
போதைப் பொருள் தடுப்பிரிவால் அறிவிக்கப்பட்ட போதைப்பொருட்கள்
-
கொக்கைன் (Cocaine)
-
மெதாஃபெடமைன் (ethamphetamines)
-
அம்ஃபெடமைன் (Amphetamines)
-
ரிடலின் (Ritalin)
-
சலர்ட் (Cylert)
-
உள்ளிழுப்பவை (Inhalants)
-
மின்னிகள் (Glues)
-
பெயிண்ட் தின்னர் (Paint thinner)
-
கேசோலைன் (Gasoline)
-
சிரிப்பூட்டும் வாயு (Laughing gas)
-
ஏரோசால் (Aerosol sprays)
-
கன்னாபினாய்ட் (Cannabinoids)
-
ஹஷிஸ் (Hashish)
-
மரிஜுன (Marijuana)
-
சோர்வூக்கிகள் (Depressants)
-
பார்பிசூராட் (Barbiturates)
-
பென்ஸோடைஸீபைன் (Benzodiazepines)
-
ஃப்ளூட்ராஸீபம் (Flunitrazepam)
-
GHB (Gamma-hydroxybutyrate)
-
மெதகுவாலோன் (Methaqualone)
-
அல்கஹால் (Alcohol)
-
ட்ரான்குல்லிசர் (Tranquillisers)
-
ஒப்பியட் மற்றும் மார்ஃபைன் (Opioids & Morphine Derivatives)
-
கோடீன் (Codeine)
-
ஃபெண்டனைல் (Fentanyl and fentanyl analogs)
-
ஹெராயின் (Heroin)
-
மார்பைன் (Morphine)
-
ஓபியம் (Opium)
-
ஆக்ஸிடோன் (Oxycodone HCL)
-
ஹைட்ரோகோடோன் பிடாட்ரேட், அசிடமினொஃபென் (Hydrocodone bitartrate, acetaminophen)
-
ஸ்டோராய்ட்கள் (Anabolic Steroids)
-
அனட்ரோல் (Anadrol)
-
ஆக்ஸட்ரின் (Oxandrin)
-
டுரபோலின் (Durabolin)
-
ஸ்டானோசால் (Stanozol)
-
டையனபால் (Dianabol)
-
Hallucinogens
-
லைசெர்ஜிக் அமிலம் டைதைலமைட் (LSD (lysergic acid diethylamide)
-
மெஸ்கலைன் Mescaline
-
சிலோசைபின் (Psilocybin)
-
கன்னபிஸ் (Cannabis)
-
Magic Mushrooms
-
Prescription Drugs
-
Opiods: Codeine, Oxycodone, Morphine
-
Central nervous system depressants: barbiturates, benzodiazepines
-
Stimulants: dextroamphetamine, methylphenidate
பண்டிகை காலம் என்பதால், இது போன்ற மருந்துகளை யாருக்கும் மருத்துவருடைய அனுமதியின்றி வழங்கக்கூடாது என்ற காவல்துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தமிழ்நாடு ஊடக பிரிவு தலைவர் திரு.பாபு அவர்கள் கலந்து கொண்டு நன்றியுரையாற்றினார்.
இராணிப்பேட்டை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்