வேலூர் : வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ்கண்ணன், உத்தரவின்பேரில் சாராய விற்பனை, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் சாராயம் விற்றதாக பேரணாம்பட்டு தாலுகா கோட்டை காலனியை சேர்ந்த கார்த்திக் (27), ஆம்பூர் தாலுகா ஞானகுட்டை பகுதியை சேர்ந்த அஜித் (23), உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 32 மதுபாட்டில்கள், 120 லிட்டர் சாராயம், 1,500 லிட்டர் சாராய ஊறல், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று விரிஞ்சிபுரம், காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட பகுதியில் பெட்டிக்கடை, மளிகை கடை குடோன்களில் நடத்திய சோதனையில் குட்கா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்