சேலம் : சேலம் புனல்வாசல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் புனல்வாசல் தலைவர் இதயராணி தலைமையில் துணைத் தலைவர் முனியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் உஷாராணி,மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் புவனேஷ்வரி, ஊராட்சி செயலாளர் சுசீலா,புனல்வாசல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். கிராமசபா கூட்டத்தில் கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் கலந்து கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் “போதைப்பொருள் இல்லா தமிழகம்” என்ற சிறப்பு திட்டத்தை பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பேரில் கிராமத் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் அவரது அறிவுரையை ஏற்று போதைப்பொருளான கஞ்சா, குட்கா இல்லாத புனல்வாசல் கிராமம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்