மதுரை : தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை தடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர்கள் சார்பில் போதை விழிப்புணர்வு பற்றி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு மதுவை ஒழிப்பது குறித்தும் போதைப்பொருட்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வது குறித்தும் கல்லூரி மாணவர்களுடன் பள்ளி மாணவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாட்டுபுற கலைஞர்களுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் டிஎஸ்பி நல்லு ஆகியோர் கொடியை அசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் உசிலம்பட்டி முக்கிய சாலையான மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை பேரையூர் ரோடு பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்று போதை ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி