வேலூர் : வேலூர் மாநகரப் பகுதியில், போக்குவரத்திற்கு இடடையூராக சில ஆட்டோ டிரைவர்கள் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி ஆட்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் வருகிறது. இவ்வாறு நடந்து கொள்ளும்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் வேலைக்கு செல்பவர்கள், நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். ரெயில்களை பிடிக்க செல்பவர்கள் அதனை விட்டு விடவும் வாய்ப்பு உள்ளது. இது போன்றவற்றுக்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. உங்களை ஏன் நீங்களே திருத்திக்கொள்ள கூடாது.
போலீசார் அபராதம் விதித்தால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுவதாக கூறுகிறீர்கள். அதனால் உங்களை நீங்களே முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாலை விதிகளை முழுமையாக ஆட்டோ டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டும். குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வெளியூர் ஆட்டோக்களை கொண்டு வந்து வேலூரில் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் ஆட்டோ டிரைவர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆட்டோ டிரைவரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்