திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய சோதனையில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 19.100 கிலோகிராம் எடையுள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் 20 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
மேலும் நான்கு நபர்களின் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.