தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம், த. கா. ப., அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 23-03-2025- ம் தேதி பாபநாசம் உட்கோட்டம் கபிஸ்தலம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பாலக்கரை பகுதியில், போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கபிஸ்தலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளார் திரு. சசிகுமார் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழு மேற்படி இடத்திற்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் குற்றவாளியான கபிஸ்தலம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது-52) என்பவர் மீது கபிஸ்தலம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடமிருந்த சட்ட விரோதமாக விறபனை செய்ய வைக்கப்பட்டிருந்த Hans- 150 kg, Vimal Pakku- 49.500 kg, Cool Lip- 7.5 Jartha -18 kg ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக கபிஸ்தலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பளர் வெகுவாக பாராட்டினர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து

திரு.முகமது மூசா