சென்னை : தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில், ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். போதை பொருட்கள் பறிமுதல் என்பதோடு அல்லாமல் நடவடிக்கையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக கஞ்சா விற்பனையில், தொடர்ந்து ஈடுபடும் கொடுங்கோற்ற வாளிகளை கண்டறிந்து குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அவ்வராக கடந்த மூன்று மாதங்களில் மதுரை திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில், பதிவு செய்யப்பட்ட எட்டு வழக்குகளில் நிதிவி விசாரணை மேற்கொள்ளப்பட்டவருகிறது.
குற்றவாளிகளின் சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஆசையா சொத்துக்கலான 31 வீடுகள், 19 நிலங்கள் மற்றும் ஐந்து கடைகள் மேலும் எட்டு வாகனங்கள், மற்றும் 18 வங்கி கணக்குகளையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் கொடுங்க குற்றவாளிகளின் மீது நிதி விசாரணை செய்து அவர்களின் சொத்துக்களை முடக்குவதோடு அல்லாமல் மற்ற கஞ்சா வழக்குகளிலும் நிதி விசாரணை செய்து அவர்களின் சொத்துக்களை முடக்குவதோடு அல்லாமல் மற்ற கஞ்சா வழக்குகளிலும் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை சட்ட முறைப்படி முடக்கம் செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதில் தற்போது தென் மண்டலத்தில், உள்ள 10 மாவட்டங்களில் சுமார் 831 வழக்குகளில் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.