திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப்பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (20.08.2022) மேலும் ஒரு நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ‘கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள்” தொடர்பான தகவல்களை (24×7) அளிக்க 9159 61 62 63 என்ற Whatsapp எண்ணினை அறிமுகம் செய்துள்ளார்.
பொதுமக்கள் மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தலாம், தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும். மேற்படி நடவடிக்கைகாக மாவட்டம் முழுவதும் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த எண்ணானது முழுவதுமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.