சிவகங்கை: காரைக்குடி உட்கோட்டம் தெற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட செஞ்சை பகுதி ஔவையார் தெருவில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து காரைக்குடி தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.பிரனிதா அவர்களின், தலைமையில் மேற்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு குற்ற எண்176/2023 u/s 273,328 IPC 24(1) COTPA ACT ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி குற்றவாளியிடமிருந்து கணேஷ் புகையிலை பான் மசாலா மற்றும் சில போதை பொருட்கள் மொத்தம் சேர்த்து 111 KG வரை கைப்பற்றப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் Dr.R. ஸ்டாலின் IPS அவர்கள், தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி பிரனிதா அவர்களை பாராட்டியுள்ளார்கள் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி