பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தல், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் குறிப்பிட்டிருந்த நிலையில் இன்று 12.12.2021-ம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒரு நபர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் போதைப் பொருள் விற்பனை தடுப்பு தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.ராம்குமார் மற்றும் அவரது குழுவினருடன் பெரம்பலூர் ஜமாலியாநகர் பகுதிகளில் சோதனையிட்டதில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான Cool lip – 27 Kg, Swagat – 70 Kg, Vimal pan Masala – 6 Kg என மொத்தம் 103 கிலோ ரூபாய் 50, 000/– மதிப்பிலான போதைப் பொருட்கள் இருப்பதை கண்ட உதவி ஆய்வாளர் மேற்படி பொருட்களை வைத்திருந்த கான்சிங் 39, என்பவரை கைது செய்தும் மேற்படி போதைப் பொருட்கள் மற்றும் மேற்படி பொருட்களை விற்பதற்காக பயன்படுத்திய TN 54 C 7087 TVS WEGA Scooty ஆகியவற்றை பறிமுதல் செய்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை