திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வந்தவாசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.N.கார்த்தி, அவர்கள் மேற்பார்வையில், கீழ்கொடுங்கலூர் காவல் ஆய்வாளர் திரு.ராஜா, அவர்கள் தலைமையில் காவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் வந்தவாசி வட்டம், விழுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமு (53), கண்ணன் என்பவர் விழுதுப்பட்டு கிராமத்தில் உள்ள அவரது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரிடமிருந்து 3.720-கிலோ கிராம் எடை உள்ள ஹான்ஸ் , குட்கா போன்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் வந்தவாசி வட்டம், கொவளை கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் (36), தேவராஜி என்பவர் கொவளை கிராமத்தில் உள்ள வைஷ்ணவி ஸ்டோரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து 424 கிராம் குட்கா போன்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் செய்யாறு வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமேஸ்வரன் (48 ), வென்கோடு கிராமத்தில் உள்ள லட்சுமி மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரிடமிருந்து சுமார் 300 கிராம் எடையுள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் மூன்று கடைகளுக்கும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மூலம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.