இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி , இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு அவர்கள் தலைமையில் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ ஜெயம் நாமக்கல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியானது திமிரி காவல் நிலையத்தில் இருந்து துவங்கி இராமபாளையம் வரை நடைபெற்றது இதில் சுமார் 130 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்..