கிருஷ்ணகிரி : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமையில், சென்னை, கலைவாணர் அரங்கில் காவல்துறை சார்பில், சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி நடைபெற்ற போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழாவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை இன்று (11.08.2023) எடுத்துக்கொண்டதை காணொளி காட்சி வாயிலாக நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தே. மதியழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர் இ. கா. ப. ஆகியோர் தலைமையில் மருத்துவக் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை இன்று (11.08.2023) எடுத்துக்கொண்டனர். உடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சீ. பாபு, உதவி ஆணையர் (ஆயம்) சுகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. தமிழரசி ஆகியோர் உள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்