கோவை: புகையிலைப் பொருட்கள் குட்கா பான்மசாலா, இளம் தலைமுறையினரைச் சீரழிக்கும் சக்தி வாய்ந்த போதைப் பொருட்களாக உள்ளது.இது போன்ற போதைப் பொருட் களால் உடல் மற்றும் மனம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
போதைப் பொருட்கள் பயன்படுத்துவோரிடம் தன்னம்பிக்கை குறைகிறது. படிப்பு, விளையாட்டுகளில் ஆர்வம் குறைகிறது. சோம்பல் மற்றும் மந்தமான நிலை காணப்படுகிறது.
தொடர்ந்து போதைப் பொருட் கள் பயன்படுத்துவோருக்கு நரம்பு மண்டலம், மனநிலை பாதிக்கப் படுகிறது. மாரடைப்பு, பக்கவாதம், வாய், உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் உள்ளிட்டவற்றில் புற்று நோய் பாதிப்பும் ஏற்படுவதுடன் கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. போதைப்பொருள் தடுப்புச் சட்டம் 1985-ன் படி விதிகளை மீறுவோருக்கு 10 முதல் 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.போதைப் பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், காவல்துறை தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது.
கோவை மாவட்டம் பீளமேடு E2 காவல்நிலையத்தின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகளை அழைத்து பீளமேடு கண்டியப்பர் கல்யாண மண்டபத்தில் குட்கா பான்மசாலா போன்ற போதைப் பொருள்களை விற்கக் கூடாது என்பது சம்பந்தமாக கிழக்கு பகுதி காவல் உதவி ஆணையாளர் அருண் அவர்கள் தலைமையில் பீளமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் விவேகானந்தன் அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் மகேந்திரன், மற்றும் தலைமை காவலர் லிங்கம் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
