இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம்(NDPS Act 1985) குற்ற வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் பொது ஏலமாக (30-10-2025) இராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால் இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. குணசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் மூன்று நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு மொத்தம் ரூபாய் 6,77,556/- அரசுக்கு ஆதாயமாக பெறப்பட்டது.
















