திருச்சி: திருச்சி மாநகரில் (23.02.24)-ந்தேதி கோட்டை காவல்நிலைய எல்லையில் நான்கு சக்கர வாகனத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கலைஞர் அறிவாலயம் அருகே தனிப்படையினர் வாகன சோதனை செய்து வந்தனர். அப்போது இரவு 9 மணியளவில் அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த TN 99 J 8363- என்ற எண்ணுள்ள Hyndai Creta காரை சோதனை செய்தபோது, அதில் சுமார் 62 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ் – 300 கிலோ, கூல்லிப் – 16.5 கிலோ, விமல்-110 கிலோ மற்றும் VI Tobacco-26 கிலோ என சுமார் ரூ.3,00,000/- மதிப்புள்ள, 455 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் வயது (23). த.பெ.அசோக்குமார் என்பவரை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேற்கண்ட குற்றவாளியை பிடித்த தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.