திருநெல்வேலி : வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு அகஸ்தியர்புரம் பேருந்து நிலையம் அருகே உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கடையம், மாலிக் நகரைச்சேர்ந்தஅஜ்மீர்அலி(36),முகமதுஹாலித்(32),ஆழ்வார்குறிச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது தௌபிக் (20), ஆகியோர் இருசக்கர வாகனத்திலும், நான்கு சக்கர வாகனத்திலும் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது காவல்துறையினரை அவதூறாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் வந்த வாகனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. பின் உதவி ஆய்வாளர் அவர்கள் மூவரையும் வி.கே.புரம் காவல் நிலையம் அழைத்துச்சென்றார். இதுகுறித்து வி.கே.புரம் காவல் ஆய்வாளர் திரு. பெருமாள் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அஜ்மீர் அலி, முகமது ஹாலிப், முகமது தௌபிக் ஆகிய மூவரையும் கைது செய்து அவரிடமிருந்து 303 கிலோ 537 கிராம் புகையிலைப் பொருட்களையும், நான்கு சக்கர வாகனத்தையும், இரு சக்கர வாகனத்தையும் காவல்துறையினர், பறிமுதல் செய்தனர்.