தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் குற்றச் செயல்களுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரத்தநாடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் பாப்பாநாடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பார்த்திபன் அவர்கள் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.விஜய் மற்றும் திரு.டேவிட் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 5.295 கிலோ (கஞ்சா) போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததுடன் குற்றவாளிகளான சிவக்குமார் மற்றம் வைரதேவன் ஆகியோரை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது