கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓசூர் போட்டோ மற்றும் வீடியோ அசோசியேஷன் சார்பில் ஆலோசனை கூட்டம். சங்க தலைவர் மாது தலைமையில் நடந்தது. செயலாளர் மஞ்சுநாத் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நலிவடைந்த புகைப்பட கலைஞர்களுக்கு வாழ்வாதரம் மேம்படுத்திட கேமரா வாங்கி மானியத்தில் வங்கி கடன் வழங்க வேண்டும். கிராமப்பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அப்பகுதியில் உள்ள புகைப்பட சுலைஞர்ளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் மற்றும் சுற்று சூழல் மற்றும் பறவைகளை பாதுகாத்திட மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் மற்றும் பறவைகளுக்கு வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் உணவு வைக்க வேண்டும் இது போன்ற நிகழ்வுகளை வீடியே எடுத்து அதனை திருமண நிகழ்வுகளுக்கு செல்லும் போது, நிகழ்ச்சிக்கு வரும் போது மக்களுக்கு எல்இடி திரையில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்