திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் டச் அகாடமி பள்ளி இயங்கி வருகிறது. இதில் பள்ளியில் பயிலும் 12 மாணவ மாணவிகள் சென்னை திருநின்றவூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டனர். சுமார் 350 மாணவர்களில் இந்தப் பள்ளியின் 12 மாணவர்கள் முதல் மற்றும் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ மாணவிகள் பொன்னேரி வட்டாட்சியர் சிவகுமாரை சந்தித்து ஆசி பெற வந்தனர். அவர்களை பாசத்துடன் வரவேற்ற வட்டாட்சியர் சிவகுமார் அவர்களை அமர வைத்து வெற்றி பெற்ற விதம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு கல்வியில் நன்றாக பயின்று வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என வாழ்த்தினார். பின்னர் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்வில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாரதி,பள்ளி தலைமை ஆசிரியை டெய்சி ராணி, சிலம்ப பயிற்சியாளர் சேகர் ஆகியோர் அருகில் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு