இராமநாதபுரம்: தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 03.02.2021-ம்தேதி சைபர் கிரைம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.வெற்றிவேல்ராஜன் அவர்கள் தலைமையில் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள சுரேஷ் அகாடமியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சார்பு ஆய்வாளர்கள் திரு.திபாகர் மற்றும் திரு.றிச்செட்சன் ஆகியோர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், சமூக வலைதளங்களை பாதுகாப்புடன் கையாளும் முறைகள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.