சென்னை : சென்னை, சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- சென்னை மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள் (வார்டன்) அமைப்பு மற்றும் சென்னை போக்குவரத்து காவல் துறை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் 23.11.2019 அன்று காலை 08.30 மணியளவில் ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி எண்.1, ஆண்டர்சன் சாலை, கொச்சின் இல்லம், நுங்கம்பாக்கம், சென்னை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் சென்னையிலிருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1000 சாலை பாதுகாப்பு ரோந்து (RSP) மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கீழ்கண்ட போட்டிகள் நடைபெற்றது.
1. பேச்சுப்போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ,
2.வினாடி வினா (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ,
3.கட்டுரை போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம்),
4. சென்னை சென்ட்ரல் மற்றும் பூங்கா ரயில் நிலையம் இடையே போக்குவரத்து பாரதிதாசன் கடக்கும் நவீனமயமாக்கப்பட்ட மாதிரிகள் கானா போட்டி.
5. போக்குவரத்து சிக்னல் மற்றும் அணிவகுப்பு போட்டிகள் நடைபெற்றது.
மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். கௌரவ விருந்தினர் உயர்திரு.A.அருண், இ,கா,ப., கூடுதல் ஆணையாளர் போக்குவரத்து, சென்னை பெருநகர காவல்துறை, உயர்திரு. முனைவர்.எழிலரசன், இ,கா,ப., சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (தெற்கு மண்டலம்), உயர்திரு.ஜெயகௌரி இ.கா.ப,. சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர் போக்குவரத்து (வடக்கு மண்டலம்) மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்த விழாவினை சிறப்பித்த திரு.ஹரிஷ் L மேத்தா, தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்), திரு அசீம் அஹமது, துணை தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்) திரு.தௌலத், துணை தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்) திரு.மூலசந்த், துணை தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்) மற்றும் 150க்கும் மேற்பட்ட போக்குவரத்து காப்பாளர்கள் மற்றும் சென்னைக்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
மேலும் புகைப்படங்களை காண கிளிக் செய்யவும்
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை